பேச்சுவார்த்தை தடைப்பட்டதை அடுத்து, இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதத் திட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்தார் கிம்.
அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய இருப்பதாகவும் வட கொரியா தெரிவித்து இருந்தது.
தென் கொரியா மிக மோசமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 26 பேர் பலியாகி உள்ளனர்.
வட கொரியாவில் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.