30வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 30வது நாளாக, இன்றும் (ஏப்.,14) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது.