மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2019 ஏப்.,14 விகாரி ஆண்டு (சித்திரை பிறப்பு) பஞ்சாங்கம் வாசிப்பின் போது 2020 ல் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டது. அதை மெய்யாக்கும் வகையில் கொரோனா பாதிப்பு உலகை உலுக்கி வருகிறது.
சித்திரை பிறப்பான இன்று (ஏப்.,14) சார்வரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்ப்புத்தாண்டு சித்திரை பிறப்பை முன்னிட்டு ஆண்டு தோறும் இக்கோயிலில் பாரம்பரியமாக சுத்த வாக்கிய பஞ்சாங்கம் வாசித்து ஆண்டு கணிப்புகள் குறித்து அறிவது வழக்கம்.
மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது